செய்யாறு: தொகுதி திமுக சாா்பில், திமுக முன்னாள் பொதுச்செயலாளர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா, பொதுக்கூட்டம்
செய்யாறு ஆரணி கூட்டுச் சாலையில் நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு நகர கழக செயலாளர் கே.விஸ்வநாதன் தலைமை வகித்தாா்.
செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினரும் நகரமன்றத் தலைவருமான ஆ.மோகனவேல், முன்னாள் எம்.எல்.ஏ வ.அன்பழகன், முன்னாள் நகரமன்றத் தலைவா் என்.சம்பத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சிறப்பு அழைப்பாளா்களாக பேச்சாளா்கள் தஞ்சை கலைமாமணி பாரதி, செந்தூா் பாலகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
நூற்றாண்டு நிறைவு விழா நினைவாக 300 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் செய்யாறு ஒன்றியக் குழுத் தலைவா் என்.வி. பாபு, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தெய்வமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்