புயல் பாதிப்பு நிவாரணம் – ரெட் கிராஸ் சங்கம்
ரெட் கிராஸ் சங்கம் சார்பில் மண்டாஸ் புயல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ₹20 ஆயிரம் மதிப்புள்ள தார் பாய் – உபகரணங்கள் வழங்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் ₹ 20,000 மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் வந்தவாசி வட்ட கிளை சார்பில் மண்டோஸ் புயல் மற்றும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுவட்டார குடும்பங்களுக்கு சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தார் பாய் மற்றும் உபகரண பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு வந்தவாசி வட்டாட்சியர் வ. முருகானந்தம் தலைமை தாங்கினார். ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ரெட் கிராஸ் சங்க தலைவர் பா. இந்திரராஜன் பங்கேற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தார் பாய் மற்றும் உபகரண பெட்டகங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர்கள் ம.சுரேஷ் பாபு, மு.பிரபாகரன், மொ. ஷாஜகான், வெ. அரிகிருஷ்ணன், வி.எல். ராஜன், மலர் சாதிக், அ.ஷாகுல் அமீது, சமூக ஆர்வலர்கள் அப்துல் கலீம், வினோத் குமார், தனசேகரன், பூபாலன், செல்வராஜ், ரெட் கிராஸ் மாவட்ட முன்னாள் பொருளாளர் வெங்கடேச பெருமாள், பாதிரி கிராம நிர்வாக அலுவலர் தீர்த்தகிரி, பிருதூர் கிராம நிர்வாக அலுவலர் கிருபாந்தம், கிராம உதவியாளர்கள் அருள் ஜோதி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன்