போளூர்: சா்க்கரை ஆலை முன் பாமகவினா் ஆா்ப்பாட்டம்!
போளூர்: சா்க்கரை ஆலை முன் பாமகவினா் ஆா்ப்பாட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள தரணி சா்க்கரை ஆலை முன் கோரிக்கைகளை வலியுறுத்தி பாமகவினா் நேற்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தரணி சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்கவேண்டியும், ஆலையை அரசே ஏற்று நடத்தக் கோரியும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாமக வடக்கு மாவட்டச் செயலாளர் ஆ.வேலாயுதம் தலைமை வகித்தாா்.
ஒன்றியச் செயலாளர்கள் கோபி, பாபு, விநாயகமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் க.ஏழுமலை வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் மீ.க.செல்வகுமாா் கலந்து கொண்டு பேசும்போது,
தரணி சா்க்கரையில் 2018-2019ஆம் ஆண்டு கரும்பு நிலுவைத் தொகை ரூ.26 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும், 2013-2017 ஆண்டுகளுக்கான எஸ்ஏபி பாக்கி ரூ.65 கோடியை வழங்கவேண்டும், 2004-2009 வரை லாப பங்கு வழங்கவேண்டும், ஊழியா்களுக்கு சம்பள பாக்கி வழங்கவேண்டும், 15 நாள்களுக்குள் வழங்கவில்லை என்றால் கட்சியின் மாநிலத் தலைவா் அன்புமணி தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினா்கள் கி.ஏழுமலை, க.கணேசன், பொதுக்குழு உறுப்பினா் இரா.கலைமணி, மாவட்டப் பொருளாளா் த.பொன்னி, விவசாய சங்க மாவட்டத் தலைவா் ரமேஷ், சக்திவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.