வந்தவாசி: ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை பிரதோஷ வழிபாடு
வந்தவாசி: ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை பிரதோஷ வழிபாடு
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை பிரதோஷ வழிபாடு நேற்று மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை தரிசனம் செய்தனர். மூலவர், உற்சவர், நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதைப் போலவே மும்முனி வேத வைதீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். உற்சவ மூர்த்திகள் கோயில் பிரகாரத்தில் உலா வந்தனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.