நாகப்பட்டினம்: உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவில் 466 ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.
நாகப்பட்டினம்: உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவில் 466 ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.
நாகூரில் அடங்கியுள்ள
ஹஜ்ரத் ஷாகுல்அமீது பாதுஷா நாயகத்தின் 466 ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது
உலக பிரசித்திபெற்ற நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் இன்று இரவு தொடங்குகிறது.
இதனையொட்டி நாகையில் இருந்து முக்கியவீதிகள் வழியாக கொடி ஊர்வலம் நடைபெறுகிறது.
இதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழாவின் தொடக்க நிகழ்வாக நாகையில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜனவரி 3 மாவட்ட உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளையும் அரசு இயக்கியிருப்பதால், பேருந்துகள், ரயில்கள் மூலம் ஏராளமான வெளிமாநிலத்தவர்கள் தர்காவிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனால் நாகூர் தர்கா, பீர்மண்டபம், பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதிச்செய்வதற்காக நாகை எஸ்.பி ஜவகர் தலைமையில் 1080 போலீசார் 150 ஊர்க்காவல் படையினர் சுழற்சிமுறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்