செய்யாறு: வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 35 ம் ஆண்டு நினைவு நாள் விழா!
செய்யாறு: வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 35 ம் ஆண்டு நினைவு நாள் விழா!
வந்தவாசி:
திருவண்ணாமலை
மாவட்டம் செய்யாறு நகரில், வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 35 வது ஆண்டு நினைவு தினம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே மோகன் அவர்களின் மேலான ஆலோசனை யின் பேரில், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது
செய்யாறு வடக்கு ஒன்றிய அதிமுக அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தொடர்ந்து அங்கு குழுமியிருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
இந் நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள் அருகாவூர் அரங்கநாதன் சி துரை குணசீலன் மு எம்எல்ஏ மற்றும் நகர கழக செயலாளர் கே வெங்கடேசன் அவைத்தலைவர் ஜனார்த்தனம் அண்ணா தொழிற் சங்க செயலாளர் அருணகிரி பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் பூக்கடை கோபால் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்