நாகூர் தர்கா 466 வது கந்தூரி விழா: கொடியேற்றத்தை, தொடர்ந்து இதுவரையில்லாத அதிகமான பக்தர்கள் கூட்டம்!
நாகூர் தர்கா 466 வது கந்தூரி விழா: கொடியேற்றத்தை, தொடர்ந்து இதுவரையில்லாத அதிகமான பக்தர்கள் கூட்டம்!
நாகப்பட்டினம்:
உலக புகழ் பெற்ற,மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக திகழும் நாகூர் தர்காவில் 466 வது கந்தூரி விழா தொடக்க நிகழ்வாக கொடியேற்றத்தை தொடர்ந்து நாகூர் நகரமே மக்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது
இந்த பெருவிழாவிற்காக தர்கா நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் சிறப்பான ஏற்பாட்டினை செய்து வருகிறது. வெளியூர் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர்வசதி கழிப்பறை வசதிகள் என அத்தியாவசிய தேவைகள் நாகூர் தர்கா நிர்வாகத்தினரால் செய்து தரப்பட்டுள்ளது
எல்லாவற்றுக்கும் மேலாக நாகூர் தர்கா மானேஜிங் டிரஸ்டி டாக்டர் செய்யது காமில் சாஹிப் அனைத்துப் பணிகளையும் நேரில் பார்வையிடுகிறார்
வரும் 3-1-2023 அன்று நடைபெற இருக்கும் சந்தன கூடு வைபவம் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கான அனைத்துப் பணிகளும் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன
இது சம்பந்தமாக தர்கா மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் செய்யது காமில் சாஹிப் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
நாகூர் நகரை / நாகூர் தர்காவை தூய்மையாக வைத்திருக்க யாத்தீரீக மக்களுக்கு நாகூர் தர்கா நிர்வாகம் வேண்டுகோள்.
1. இது உங்கள் தர்கா, உங்கள் மன அமைதியடைய கூடிய புனித ஸ்தலம் – முடிந்தவரை தூய்மையாக வைத்திருங்கள்.
2. பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்ப்பீர்.
3. முடிந்தவரை தனி மனித இடைவெளி பேணவும். முக கவசம் உங்களை காக்கும் முடிந்தவரை முக கவசம் அணியவும்.
4. குப்பைகளை கண்ட இடத்தில் போடாதீர்கள். குப்பை தொட்டிகளில் போடுங்கள்.
5. தங்களது செருப்புகளை தர்கா உள்ளே எடுத்து செல்லாதீர்கள்.
6. தர்கா கழிவறைகளை பயன்படுத்தினால் சுத்தம் செய்துவிட்டு செல்லுங்கள்.
7. குடிநீரை வீண் விரயம் செய்யாதீர்கள்.
8. தர்காவில் வழங்கப்படும் அன்னதான உணவுக்களை வீணடிக்காதீர்கள்.
9. தர்கா குளத்தில் உணவு பொருட்களை குப்பைகளை போடதீர்கள்.
10. தர்கா குளம் ஆழம் மிகுந்தது, நீச்சல் தெரியாதவர்கள் குளத்தில் குளிப்பதை தவிர்க்கவும். சோப்பு, ஷாம்பு போட்டு தர்கா குளத்தை அசுத்தம் செய்யாதீர்கள். குளத்தில் துணிகளை துவைக்காதீர்கள்.
11. தர்கா முடி இறக்கும் இடத்தை அசுத்தம் செய்யாதீர்கள்.
12. பிரார்த்தனை செய்யும் இடங்களில் பிறருக்கு இடையுறாக புகைப்படம் / வீடியோ எடுக்காதீர்கள்.
13. நாகூர் தர்கா பிரார்த்தனை ஸ்தலம், அங்கு அமர்ந்து யூடியுப், பேஸ்புக் போன்ற சோசியல் மீடியாக்களை பயன்படுத்தாதீர்கள்.
14. தர்காவில் / பொது இடங்களில் ஏதேனும் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் கண்டால் தர்கா அலுவலகத்தில் தெரியபடுத்தவும்.
15. தங்களது உடைகளை தாங்களே பார்த்து கொள்ளுங்கள், ஒரு வேளை உடைமைகள் பொருட்கள் தொலைந்தால் தர்கா அலுவலகம் முன் அமைந்துள்ள தொண்டர் படையை உடனே தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
16. உங்களது குறை நிறைகளை மானேஜிங் டிரஸ்டி, நாகூர் தர்கா, நாகூர்-611002 என்ற முகவரிக்கு எழுத்து பூர்வமாக தெரியுங்கள். அதனை சரி செய்திட ஒரு வாய்ப்பாக எங்களுக்கு அது அமையும். அவசர குறை நிறைகளை வாட்சப் மூலமாக தர்கா மானேஜிங் டிரஸ்டிக்கு (96774-10786/98424-41404) அனுப்பவும்.
தர்கா முழுவதும் CCTV வைக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறியவும் என கூறப்பட்டுள்ளது