தமிழக அரசு பொது கணக்கு குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் செயலர்கள் நாகூர் தர்கா வருகை!
தமிழக அரசு பொது கணக்கு குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் செயலர்கள் நாகூர் தர்கா வருகை!
நாகப்பட்டினம்:
தமிழக அரசு பொது கணக்கு குழு தலைவர் கு. செல்வ பெருந்தகை, உறுப்பினர்கள் ஜவாஹிருல்லா , பூண்டி கலைவாணர் மற்றும் அரசு செயலர்கள் நாகூர் தர்கா வருகை புரிந்தனர். நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஸ் நாகை மாவட்ட ஆட்சியர் தம்பு ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவர் கலீபா சாஹிப் அனைவரையும் வரவேற்று சால்வை அணிவித்தார்.
அனைவராலும் போற்றப்படும் நாகூர் ஆண்டவர் ஹஜ்ரத் ஷாகுல்அமீது பாதுஷா நாயகத்தின் தர்காவினுள் சென்று பாத்திஹா ஓதி் துவா செய்யப்பட்டது.
தர்கா நிர்வாகம் சார்பாக கட்டிடங்களை புதுப்பிக்க அரசு உதவி கோரி,கோரிக்கைகள் வைக்கப்பட்டன
வருகை புரிந்த அனைவருக்கும் அரிய நாகூர் தர்கா புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டிகள், தர்கா மானேஜர், ஜமாஅத் நிர்வாகிகள் உடனிருந்தனர்.