தமிழகம் முழுவதும் நாளை குழந்தைகளுக்கு மூன்றாவது தவணை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்
தமிழகம் முழுவதும் நாளை குழந்தைகளுக்கு மூன்றாவது தவணை போலியோதடுப்பு சொட்டுமருந்து முகாம்
தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் ஆகிய இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
போலியோ தடுப்பு சொட்டு மருந்து நாளை (ஜன 4 ) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செலுத்தப்படும். தமிழக முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
அதில் 9 முதல் 12 மாத வயது கொண்ட குழந்தைகளுக்கு மூன்றாவது தவணை போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. எனவே பெற்றோர்கள் மறக்காமல் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்தை செலுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.