FEATURED

வந்தவாசி: எக்ஸ்னோரா சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி!

வந்தவாசி: எக்ஸ்னோரா சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் கிளை சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணியை டிஎஸ்பி என்‌. கார்த்திக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் புகையில்லா போகி விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற பல்வேறு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வட்டாட்சியர் வி. முருகானந்தம் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இந் நிகழ்விற்கு எக்ஸ்னோரா கிளை தலைவர் இ. சாதிக் பாட்சா தலைமை தாங்கினார்.

செயலாளர் ம.ரகு வரவேற்றார்.

பள்ளி தலைமை ஆசிரியர் வி. ராம்குமார், இயக்குநர்கள் இரா. அருள் ஜோதி, இரா. தேன்மொழி, வழக்கறிஞர் சா.ரா‌ மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வந்தவாசி நகர் மன்ற தலைவர் எச். ஜலால், துணைத் தலைவர் க.சீனுவாசன், நகராட்சி ஆணையர் சரவணன் ( பொறுப்பு), தொழிலதிபர் கவிஞர் இஷாக்,  ஆகியோர் கருத்துரைகள் வழங்கினர்.

இயக்குநர்கள் மு. பிரபாகரன்,  அறிவொளி வெங்கடேசன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

பேரணியில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

நகராட்சி தூய்மை பணியாளர்கள் பலரும் அலுவலர் பழனி மேற்பார்வையில் பங்கேற்றனர்.

இறுதியில் எக்ஸ்னோ கிளை துணை தலைவர் பா. சீனிவாசன் நன்றி கூறினார்.

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *