வாணியம்பாடி: இஸ்லாமிய கல்லூரியில் 25வது தேசிய உருது புத்தகக் கண்காட்சி நிறைவு விழா!
வாணியம்பாடி: இஸ்லாமிய கல்லூரியில்
25வது தேசிய உருது
புத்தகக் கண்காட்சி நிறைவு விழா!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் நேற்று 25 வது தேசிய உருது புத்தகக் கண்காட்சியின் நிறைவு விழா நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணை தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான எம். அப்துல் ரஹ்மான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அரங்கத்தில் அமையப் பெற்றிருந்த அறிவியல் கண்காட்சியினை பார்வையிட்டு அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் பரிசுத்தொகையும் வழங்கினார்.
விழாவில் தொழிலதிபர் படேல் முஹம்மது யூசுப், ஆலங்காயம் ஜப்ருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் நீசார் அஹ்மத், நகர தலைவர் எஸ் எஸ் பி பாரூக் நகர செயலாளர் நரி முஹம்மது நயீம் நகர பொருளாளர் டி முஹம்மது நயீம் நகர துணை செயலாளர் இஸ்மாயில், நவீன் மோசைக்ஸ் அதிபர் கோவிந்தராஜ், நகர நிர்வாகிகள் பாக்கார் ஜப்ருல்லா,ஷபாஅத்துல்லா,பர்கத், பாபுஜீ (எ) சையத் சாதுல்லா, பீரான் , அப்துல் ரஹீம், இம்ரான் மதானி, முஹம்மது பைசன், மற்றும் கல்லூரி பொறுப்பாளர்கள் , நகர முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.