வந்தவாசி: திருவள்ளுவர் நற்பணி மன்றம் சார்பாக “சமத்துவ பொங்கல் ” திருவிழா!
வந்தவாசி: திருவள்ளுவர் நற்பணி மன்றம் சார்பாக “சமத்துவ பொங்கல் ” திருவிழா!
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில், சமத்துவ பொங்கல் திருவிழா திருவள்ளுவர் நற்பணி மன்றம் சார்பாக பொட்டி நாயுடு தெரு ராஜேஸ்வரி திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது
திருவள்ளுவர் நற்பணி மன்ற தலைவரும், வந்தவாசி நகர மன்றத் துணை தலைவருமான அன்னை க சீனு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட திமுக செயலாளர் எம்எஸ் தரணிவேந்தன் சட்டமன்ற உறுப்பினர் எஸ் அம்பேத்குமார் தொழிலதிபர் முகமது முஸ்தபா கலந்து கொண்டு “சமத்துவ பொங்கல் ” நிகழ்வை துவக்கி வைத்தனர்
இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் என அனைவரும் ஒருங்கிணைந்து பொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல் என சப்தமிட்டு மத நல்லிணக்க சூழலை உருவாக்கினர்
உடன் நகர மன்றத் தலைவர் எச் ஜலால் நகர திமுக செயலாளர் தயாளன் முன்னாள் நகர செயலாளர் எஸ் அன்சாரி காங்கிரஸ் பிரமுகர் கலீம் நகர மன்ற உறுப்பினர் நாகூர் மீரான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்