தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்: வேலைவாய்ப்பு முகாம் 250 பேருக்கு பணி ஆணை!
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்: வேலைவாய்ப்பு முகாம்
250 பேருக்கு பணி ஆணை!
வந்தவாசியை அடுத்த தெள்ளாா்
வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற திறன் பயிற்சி மற்றும் தனியாா் துறை நேரடி வேலைவாய்ப்பு முகாமில், 120 போ் திறன் பயிற்சி பெறவும், 250 போ் வேலைவாய்ப்புக்கும் தோ்வு செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இம் முகாமுக்கு தெள்ளாா் ஒன்றியக் குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன் தலைமை வகித்தாா்.
தெள்ளாா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜி.ஆனந்தன் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட திட்ட இயக்குநா் பா.அ.சையத் சுலைமான் முகாமை துவக்கி வைத்துப் பேசினாா்.
முகாமில் தனியாா் தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் அலுவலர்கள் பங்கேற்று நோ்காணலை நடத்தினா்.
இதில் 250 போ் வேலைவாய்ப்புக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
மேலும் திறன் பயிற்சி நிறுவன அதிகாரிகள் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி பெற 120 பேரை தோ்வு செய்தனா்.
முகாமில் உதவித் திட்ட இயக்குநா்கள் சந்திரகுமாா், ஜான்சன், வாழ்வாதார இயக்க வட்டார மேலாளா்கள் எஸ்.சாந்தி, முத்துக்குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.