வந்தவாசி போர் குறித்த சிறப்பு உரையரங்கு: வந்தவாசி கோட்டையை பாதுகாக்க அரசுக்கு வலியுறுத்தல்!
வந்தவாசி போர் குறித்த சிறப்பு உரையரங்கு: வந்தவாசி கோட்டையை பாதுகாக்க அரசுக்கு வலியுறுத்தல்!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகத்தில் பூங்குயில் பதிப்பகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில்,
263 ஆண்டுகளுக்கு முன்பு 22-01-1760 அன்று நடைபெற்ற வந்தவாசி போர் குறித்த சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு நகராட்சி துணை தலைவர் க. சீனுவாசன் தலைமை தாங்கினார்.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், நகர ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவர் காளிச்செல்வம், ஆர்ஜி மார்டன் சமுதாய கல்லூரி நிர்வாகி ஏ. விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, தொல்லியல் துறை காப்பாட்சியர் அ. ரஷீத்கான் பங்கேற்று பேசினார்.
வந்தவாசி போர் குறித்தும், வந்தவாசி கோட்டையின் அமைப்பு பற்றியும், வந்தவாசி கோட்டையிலிருந்து அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதைகள் பற்றியும், சுற்றுப்புற செயல்பாடுகளைப் பற்றியும், கோட்டை பகுதியில் கிடைத்த பொருட்கள் பற்றியும் நினைவுகூர்ந்தார்.
மேலும் வந்தவாசி கோட்டையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் தொழிலதிபர் கவிஞர் அ.ஜ. இஷாக் வந்தவாசி போர் நிலை பற்றிய கருத்துரைகளை வழங்கினார்.
மருத்துவ துறை மாணவிகள் பங்கேற்ற பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
நூலகர்கள் மோகன், ஜோதி, வழக்கறிஞர் மணி ஆகியோர் பங்கேற்றனர்.
இறுதியில் பூங்குயில் பதிப்பக ஆசிரியர் டி.எல். சிவக்குமார் நன்றி கூறினார்.