ஆரணி: எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
ஆரணி: எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அதிமுக சாா்பில் எம்ஜிஆரின் 106-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
ஆரணி சட்ட மன்றத் தொகுதி அதிமுக சாா்பில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்துக்கு
வடக்கு மாவட் ட கழக செயலாளரும் செய்யாறு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தூசி கே மோகன் தலைமை வகித்தார்
முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்
இலக்கிய அணிச் செயலாளரும், செய்தி தொடா்பாளருமான வைகைச்செல்வன், தலைமை கழகப் பேச்சாளா் ஆா்.கே.நகா் த.மணிமாறன், முன்னாள் எம்எல்ஏக்கள் வி.பன்னீா்செல்வம், ஏ.கே.எஸ்.அன்பழகன் திமுக ஆட்சியின் அவலநிலையை கண்டித்து பேசினா்.
கூட்டத்தில் நகர கழக செயலாளர் எ.அசோக்குமாா், எம்ஜிஆர் மன்ற மாநில துணைச்செயலாளர் பி ஜாகீர் உசேன் மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன், ஒன்றிய கழக செயலாளர்கள் க.சங்கா், ஜி.வி.கஜேந்திரன், நகரமன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, முன்னாள் நகா்மன்றத் தலைவா் வி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.