வந்தவாசி அடுத்த சளுக்கையில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம்!
வந்தவாசி அடுத்த சளுக்கையில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம்!
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சளுக்கை கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடைபெற்றது
ஊராட்சி மன்றத் தலைவர் எஸ் எ தேவராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்
கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஊராட்சி செயலரால் வாசிக்கப்பட்டது
பொது சுகாதாரம், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு, நடவடிக்கை மேற்கொள்ளுதல்
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்
அனைவருக்கும் வீடு பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், கிராம சாலை அமைக்கும் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதி திட்டம்
பெண் குழந்தை கல்வி பாதுகாப்பு மற்றும் தொழு நோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன