காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 3-ந் தேதி வேட்பு மனுத்தாக்கல்
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 3-ந் தேதி வேட்பு மனுத்தாக்கல்
வேட்புமனுத்தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடக்கிறது.
10-ந் தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இவரிடம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
வேட்புமனுத்தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடக்கிறது.
8-ந் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது.
10-ந் தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும்.
வேட்புமனுக்கள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வருகிற 3-ந் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். அவர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று மனுத்தாக்கல் செய்கிறார்.