ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு வாக்குகள் சேகரித்தார் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு வாக்குகள் சேகரித்தார் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன்
ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் கே.எஸ். தென்னரசை ஆதரித்து முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ் ராமச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
இன்று கருங்கல்பாளையம்_பகுதி, வார்டுஎண் 42, பூத்எண் 167-ல்
வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று, எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான புரட்சித் தலைவி அம்மா அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகள் சேகரித்தார்
மேலும் மக்கள் விரோத திமுக அரசின் அவலநிலையை எடுத்துரைத்தார்
நலத்திட்டங்களை
நிறுத்தி,பொதுமக்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு பாடம் புகட்டும் வகையில், வருகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அவர்கள் வெற்றி பெற அயராது பாடுபடவேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கி பேசினார்
உடன் கருங்கல்பாளையம், 42-வது பகுதி செயலாளர் முருகசேகர் (எ) முருகுநாதன், ஆரணி நகர கழக செயலாளர், அசோக்குமார் ஆரணி வடக்கு ஒன்றிய கழக செயலாளர், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயப்பிரகாஷ் தி.மலை மாவட்ட ஐடி விங் செயலாளர் எஸ்.பி.சரவணன் மேற்கு ஆரணி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் குண்ணத்தூர் செந்தில் கிளை கழக செயலாளர் மில் சரவணன் வட்ட செயலாளர் வீரா.செந்தில்குமார் பகுதி கழக துணை செயலாளர் வெள்ளயங்கிரி ஆறுமுகம், வரதராஜன், சிதம்பரம், எம்ஜிஆர் மணி, மகேஷ்குமார், திவ்யா, மதுமிதா, சோபிகா, ராணி மற்றும் வாக்கு சாவடி கழக தேர்தல் பொறுப்பாளர்கள், மற்றும் ஆரணி சட்டமன்ற தொகுதி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.