நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து சீமான் வருகிற 13 – 15-ந்தேதி வரை 3 நாட்கள் பிரசாரம்!
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து சீமான் வருகிற 13 – 15-ந்தேதி வரை 3 நாட்கள் பிரசாரம்!
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், அமைச்சர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி., மற்றும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருமாவளவன், வைகோ, மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்கிறார்கள். இதற்கான அதிகார பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வருகிற 12-ந்தேதி முதல் பிரசாரம் தொடங்குகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
12-ந்தேதி பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 5 நாட்கள் தீவிர பிரசாரம் செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
பின்னர் தேர்தலுக்கு முந்தைய 2 நாட்களிலும் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
13-ந்தேதி மாலையில் திருநகர் காலனியில் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசுகிறார். தொடர்ந்து 2 நாட்கள் வேட்பாளருடன் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த்தை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் 12-ந் தேதி பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால் திடீரென அது ஒத்திவைக்கப்பட்டது.
பிரேமலதா, விஜயபிரபாகர் பிரசாரம் குறித்த விவரம் இன்னும் ஓரிரு நாளில் தெரியவரும் என்று கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக தி.மு.க.வின் முன்னணி தலைவர்களும் பிரசாரம் செய்ய உள்ளனர்.
இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.
அவரது சுற்றுப்பயண விவரம் வருமாறு:-
சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சம்பத் நகர், மாணிக்கம்பாளையம் கவுசிங் யூனிட் அடுக்குமாடி குடியிருப்பு, சூளை, குளம் வழியாக அக்ரகாரம் வண்டிபேட்டை, சத்யா நகர், நெறிகல் மேடு, காவேரி ரோடு மாரியம்மன் கோவில், 16 நம்பர் பஸ் ரோடு, சத்திரோடு, சுவஸ்திக் கார்னர், பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, மரகதவள்ளி பங்க் வழியாக பட்டேல் வீதி, கலைமகள் பள்ளி வழியாக பிரப் ரோடு, பன்னீர் செல்வம் பார்க், காந்திஜி ரோடு வழியாக அசோக புரி, விக்ரம் மருத்துவமனை வழியாக ரோடு, காளைமாட்டு சிலை வழியாக காந்திஜி சிம்னி ஓட்டல், பழைய ரெயில் நிலையம் வழியாக ஆலமரத்து தெரு, சமாதானம்மாள் சத்திரம், சூரம்பட்டி நால்ரோடு, சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகை வரை பிரசாரம் செய்கிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 19-ந்தேதி சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு குமலன் குட்டை, கணபதி நகர், அடுக்குமாடி குடியிருப்பு, நாராயண வலசு, இடையன் காட்டு வலசு, முனிசிபல் காலனி, அகில் மேடு வீதி, பழனி மலை கவுண்டர் வீதி, சொக்கநாதர் வீதி, மெட்ராஸ் ஓட்டல், ராஜாஜிபுரம், கே.என்.கே.ரோடு, வண்டியூரான் கோவில் வீதி, விநாயகர் கோவில் வீதி, கிருஷ்ணம்பாளையம், திருநகர் காலனி, சகன் வீதி, சேரன் வீதி, வீரப்பன் சத்திரம் தெப்பக்குளம்.
16 நம்பர் பஸ் ரோடு, நெறிகல் மேடு, சத்யா நகர், அக்ரகாரம் வண்டி பேட்டை, பூம்புகார் நகர், காந்திநகர், வில்லரசம் பட்டி நால்ரோடு வழியாக, சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் முடிக்கிறார்.
20-ந்தேதி சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் புறப்பட்டு அரசு மருத்துவமனை, நல்லசாமி மருத்துவமனை வீதி, சிதம்பரம் செட்டியார் காலனி, இந்தியன் வங்கி, சென்ட்ரல் தியேட்டர், கால்நடை மருத்துவமனை எதிரில், சித்திக் திடல், மண்டப வீதி, 1,2 செட்டியார் கடை, ஜின்னா வீதி, கிருஷ்ணா தியேட்டர், காந்தி சிலை (ரங்க பவன் வழியாக சின்ன மாரியம்மன் கோவில் வீதி), பொன்னுசாமி வீதி, கே.ஏ.எஸ். நகர், வளையக்கார வீதி, காரை வாய்க்கால், அண்ணா டெக்ஸ், சமாதானம்மாள் சத்திரம், பழைய ரெயில் நிலையம் ரோடு, ஆலமரத்து தெரு, அண்ணாமலை பிள்ளை வீதி, பட்டக்கார வீதி, பொய்யேரிக்கரை வீதி பயர் சர்வீஸ் பின்புறம், காளைமாட்டு சிலை, மணல் மேடு, பழைய எம்ப்லாய்மென்ட் ஆபிஸ் ரோடு வழியாக கிராமடை, சீனிவாசா தியேட்டர், என்.ஜி.ஜி.ஓ காலனி, பெருந்துறை ரோடு, சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.