வந்தவாசி: எச்சூர் சாய்பாபா கோவில் 10ஆம் ஆண்டு துவக்க விழா!
வந்தவாசி: எச்சூர் சாய்பாபா கோவில் 10ஆம் ஆண்டு துவக்க விழா!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எச்சூர் சாய்பாபா கோவிலின் 10 ஆம் ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த கோவிலில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்று கோவில் அமையப்பெற்று 10 ஆண்டுகள் ஆனதையொட்டி, மூல மூர்த்திக்கு யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தேறியது.
மலர் கிரீடம் சாற்றப்பட்டு, பூமாலைகள் அணிந்தவாறு பக்தர்களுக்கு சாய்பாபா காட்சி அளித்தார்.
பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.