ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பிரச்சாரம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக ஆதரவு காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு “கை” சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நேற்று மாலை வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து திமுக ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களை விளக்கி கூறி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்குகளை சேகரித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
உடன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தவாசி எஸ் அம்பேத்குமார் செய்யாறு ஓ ஜோதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
மற்றும் செயற்குழு உறுப்பினர் கே.வி.ராஜ்குமார் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் உள்ளிட்ட மாவட்ட , ஒன்றிய,கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்