உச்சநீதிமன்றம்: எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான தீர்ப்பு! தேர்தல் களத்தில் அதிமுக வினர் கொண்டாட்டம்!
உச்சநீதிமன்றம்: எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான தீர்ப்பு! தேர்தல் களத்தில் அதிமுக வினர் கொண்டாட்டம்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல்களத்தில்,திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில், அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கு சாதகமாக உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததை யொட்டி வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி.கே.மோகன் தலைமையில், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பெரணமல்லூர் ஏகேஎஸ் அன்பழகன் கலசபாக்கம் வி.பன்னீர்செல்வம் ஆரணி நகர மன்ற துணைத் தலைவர்
பாரி பாபு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பட்டாசுகள் கொளுத்தியும் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
இந் நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் வக்கீல் சங்கர்
ஜி.வி.கஜேந்திரன் ஜி.செல்வராஜ்
ஜமுனாமுத்தூர் வெள்ளையன்
வக்கீல் ரமேஷ் மற்றும் செய்யார் நகர கழக செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய,நகர கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்