பெருங்கட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊர்புற நூலகம் இணைந்து முப்பெரும் விழா!
பெருங்கட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊர்புற நூலகம் இணைந்து முப்பெரும் விழா!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டம் பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் (1) தன்னம்பிக்கை பயிற்சி (2) உடல் நலமும் மனம் நலமும் பேச்சு (3) உறுப்பினர்கள், புரவலர்கள் சேர்ப்பு நிகழ்வு முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆ. ஆயப்பன் தலைமை வகித்தார்.
ஆசிரியர் ரா. குருமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வி, ஆசிரியர் இ. கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு உரை வழக்கறிஞர் ப. கோபாலகிருஷ்ணன் மாணவர்கள் இடையே தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினார்.
“மாணவர்கள் அப்துல் கலாமை போன்று கனவு கண்டு நம்முடைய வாழ்க்கை மேம்படுத்தி வருங்கால இந்தியாவின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்” என்று கூறினார்.
உடல் நலமும் மனம் நலமும் குறித்து லயன் சங்க மாவட்ட சேவை தலைவர் தி. வடிவேல் மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார்.
“மாணவர்கள் நம்முடைய உண்ணும் உணவில் சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும் என்றும் ஊட்டச்சத்து மிக்க பழங்கள், காய்கறிகள் சத்தான பொருட்கள் மட்டும் உண்ண வேண்டும்” என்று பேசினார்.
நிகழ்வில் புரவலர்களாக வழக்கறிஞர் ப. கோபாலகிருஷ்ணன்,
ஆசிரியர் வி. லோகநாதன் மற்றும் பள்ளி மாணவர்கள் 50 பேர் உறுப்பினர்களாக சேர்ந்தனர்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர் ஜா. தமீம் செய்திருந்தார்.