FEATURED

ஈரோடு கிழக்கு: காங்கிரஸ் வெற்றி உறுதி! மக்கள் ஆய்வு அமைப்பு  கருத்துக்கணிப்பு!

ஈரோடு கிழக்கு: காங்கிரஸ் வெற்றி உறுதி! மக்கள் ஆய்வு அமைப்பு  கருத்துக்கணிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 39.5 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெறும் என்றும்.. அதிமுக 24.5 சதவீத வாக்குகள் பெறும் என்றும் மக்கள் ஆய்வு அமைப்பு  மக்களிடம் ஆய்வு நடத்தி தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.

காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார்.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்
இதேபோல் நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிகவும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. அதன்படி நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதனும், தேமுதிக சார்பில் ஆனந்த் என்பவரும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கு இரண்டு நாட்களே இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் ஈரோட்டில் முகாமிட்டு தங்கள் கட்சிகளுக்காக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

கருத்துக் கணிப்பு முடிவு:

இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்பது குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகளை மக்கள் ஆய்வு என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

மக்கள் ஆய்வு அமைப்பின் இயக்குனர் பேராசிரியர் ச.ராஜநாயகம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“முதல் இடத்தில் காங்கிரஸ்
எங்கள் கள ஆய்வின் படி காங்கிரஸ் கட்சி 39.5 சதவீத வாக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. அதிமுக 24.5 சதவீத வாக்குகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது.

நாம் தமிழர் கட்சி 9.5 சதவீத வாக்குகளுடன் 3-ம் இடம் பெற்றுள்ளது.

தேமுதிக. 2 சதவீத வாக்குகளுடன் 4-ம் இடத்தில் உள்ளது. தற்போது மவுனம் காத்து வரும் 21% வாக்காளர்களின் வாக்குகளையும் சேர்த்த கருத்துக் கணிப்பின் படி பார்த்தால் காங்கிரஸ் கட்சி 65 சதவீத வாக்குகளும் அதிமுக 41 சதவீத வாக்குகளையும் நாம் தமிழர் 17 சதவீதம் மற்றும் தேமுதிக 4 சதவீத வாக்குகளையும் பெறும்.

மவுன வாக்காளர்களின் பெரும்பான்மை வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும்பட்சத்தில் மற்ற அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழக்கும். அதிமுகவிற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால் காங்கிரசின் வாக்கு வேறுபாடு குறையுமே தவிர, காங்கிரஸ் வெற்றியில் பாதிப்பு இல்லை.

அதே சமயத்தில் 21 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்களின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு 29.5 சதவீமும், காங்கிரஸ் கட்சிக்கு 28.5 சதவீதமும் அதிமுகவுக்கு 17 சதவீதமும், தேமுதிகவுக்கு 3 சதவீதமும் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *