பெரணமல்லூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கோலாகலம்! முன்னாள் எம்எல்ஏ ஏகேஎஸ் அன்பழகன் தலைமையில் ஏழைகளுக்கு அன்னதானம்!
பெரணமல்லூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கோலாகலம்! முன்னாள் எம்எல்ஏ ஏகேஎஸ் அன்பழகன் தலைமையில் ஏழைகளுக்கு அன்னதானம்!
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடபட்டது
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ வழிகாட்டுதல்படி, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 75 வது பிறந்த நாள் விழா முன்னாள் எம்எல்ஏ ஏகேஎஸ் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது
நகர கழக செயலாளர் ஆர் மூர்த்தி துணைச்செயலாளர் ஏகேஎஸ் அறிவழகன் அனைவரையும் வரவேற்றனர்
அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
தொடர்ந்து அங்கு குழுமியிருந்த ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் ஏகேஎஸ் அன்பழகன் வழங்கினார்
இந்நிகழ்வில், முன்னாள் எம்எல்ஏ ஏகேஎஸ் அன்பழகன் முன்னிலையில், மாற்றுக் கட்சியினர் அதிமுக வில் இணைந்தனர்
உடன் ஒன்றிய,நகர கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்