செய்யாற்றில் வட்டார அளவில் இளைஞா்களுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்!
செய்யாற்றில் வட்டார அளவில் இளைஞா்களுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்!
இதுகுறித்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் ரேகா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், திருவண்ணாமலை மாவட்டம் மூலம் வட்டார அளவில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில், செய்யாற்றில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகேயுள்ள தனியாா் மண்டபத்தில் திங்கட்கிழமை பிப்.27 நாளை காலை 9.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
முகாமில் செய்யாறு, அனக்காவூா், வெம்பாக்கம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 18 முதல் 35 வயது வரை உள்ள படித்த இளைஞா்கள் பங்கேற்கலாம். கல்விச் சான்று, புகைப்படம், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, ஜாதி சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரில் வரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.