செய்யாறு: இளைஞர்களுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!
செய்யாறு: இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்புமுகாம்!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம் மூலம், மாவட்ட ஆட்சியர், மாவட்ட திட்ட இயக்குனர் ஆகியோரின் ஆலோசனைப்படி இளைஞர்களுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
வட்டார இயக்க மேலாளர் முருகன் வரவேற்புரையாற்ற,உதவி திட்ட அலுவலர் எஸ் சந்திரகுமார் நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்
இந்த வேலை வாய்ப்பு முகாமில் செய்யாறு,அனக்காவூர்,வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இளம்பெண்கள் கலந்து கொண்டனர்
12 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயன் பெற்றனர்
இதற்கான ஏற்பாடுகளை வட்டார இயக்க மேலாளர்கள் ரேகா மகாலட்சுமி முருகன் செய்திருந்தனர்