முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முனீருல் மில்லத் பேராசிரியர் காதர்மொகிதீன் பிறந்த நாள் வாழ்த்து!
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முனீருல் மில்லத் பேராசிரியர் காதர்மொகிதீன் பிறந்த நாள் வாழ்த்து!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சாஹிப் தலைமையில், முஸ்லிம் லீக் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே எம் காதர் மொகிதீன் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மாநில முதன்மை துணைத் தலைவரும் வக்பு வாரிய தலைவருமான எம்.அப்துல் ரஹ்மான், மகளிர் லீக் தேசியத் தலைவி பாத்திமா முஸஃப்பர், மாநில செயலாளர்கள் கே.எம்.நிஜாமுதீன், ஆடுதுறை ஷாஜஹான், ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்
தொடர்ந்து முஸ்லிம் லீக் பவள விழா அழைப்பிதழை முனீருல் மில்லத் பேராசிரியர் கே எம் காதர் மொகிதீன் வழங்க, அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உடன் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, ஊடகவியலாளர் திருச்சி ஷாஹுல் அமீது உள்ளிட்டோர்