கூழமந்தல் ஸ்ரீ சோளீஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு விழா!
கூழமந்தல் ஸ்ரீ சோளீஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு விழா!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம், கூழமந்தல் கிராமத்தில் உள்ள சோழா் காலத்து ஸ்ரீ விசாலாட்சி உடனுறை உத்திர ஸ்ரீ கங்கை கொண்ட சோளீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது.
பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கோயிலின் குடமுழுக்கு விழா வானது முற்றிலும் திருநெறிய தீந்தமிழால் நடத்தப்பட்டது.
விழாவையொட்டி,நேற்று காலை 6 மணிக்கு
மங்கள இசை திருப்பள்ளி எழுச்சி, நினைவு திருமஞ்சனம் மூலத்திருமேனிகளுக்கு ஆனைந்து ஆட்டுதல்.
காப்பு அணிவித்தல் நடைபெற்றது.
7.30 மணிக்கு இன்பத்தை அருள் ஊட்டும் இறைவனுக்கு இன்பத் தமிழால் இரண்டாம் கால வேள்வியும்,
9 மணிக்கு கலைகள் நாடியின் வழியாக மூலத்திருமேனிகளை சென்றடைதல், போ் சூட்டுதல்
9.30 மணிக்கு வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம், திருவடி விண்ணப்பமும், 10.15 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடும்,
10.45 மணிக்கு விமான திருக்குடமுழக்கு,
11.15 மணிக்கு மூலத்திருமேனிகளுக்கு திருக்குடமுழக்கு நன்னீராட்டு பெருவிழாவும் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, நண்பகல் 12 மணிக்கு திருமஞ்சனம், ராச அலங்காரம், பதின்மங்கலக் காட்சி, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம், திருவடி விண்ணப்பம், அருளாா் அமுதம் வழங்குதல் என குடமுழுக்கு விழா நடைபெற்றது.
விழாவின் போது பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வேப்பூா் சிவ ஆனந்த குடில் அறக்கட்டளை சிவ.அ.பொ.தங்கதுரை அய்யா தலைமையிலான குழுவினா் பங்கேற்று சிவ வாத்தியங்கள் முழங்க திருநெறிய தீந்தமிழால் நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.
இந் நிகழ்வை தொடர்ந்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ தலைமையில், எம்ஜிஆர் மன்ற மாநில துணைச்செயலாளர் பி ஜாகீர் உசேன் ஒன்றிய கழக செயலாளர்கள் சி துரை எம் மகேந்திரன் அருகாவூர் அரங்கநாதன் மு எம்எல்ஏ வே குணசீலன் செய்யாறு நகர கழக செயலாளர் வெங்கடேசன் அவைத்தலைவர் ஜனார்த்தனம் ஒன்றிய குழு உறுப்பினர் உக்கல் பி லட்சுமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சுவாமிகளை தரிசித்தனர்
உக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் துளசிராமன் கூழமந்தல் கிளை கழக செயலாளர் பாலாஜி உள்ளிட்டோர் அதிமுக நிர்வாகிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்