FEATURED

வந்தவாசி: ரெட் கிராஸ் சங்கம் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்!

வந்தவாசி: ரெட் கிராஸ் சங்கம் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் வந்தவாசி கிளை சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு ஊராட்சி மன்றத் தலைவர் வீரராகவன் தலைமை தாங்கினார்.

பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா, துணைத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, மாவட்ட ரெட் கிராஸ் சங்க தலைவர் பா. இந்திரராஜன் பங்கேற்று, தூய்மை பணியாளர்களுக்கு அத்யாவசிய உபகரண பெட்டகத்தை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

மேலும் “பெண்கள் கல்வி கற்றால் தான் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட முடியும்” என்று வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர்கள் பெ. பார்த்திபன், அ. ஷாகுல் அமீது உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

பள்ளி ஆசிரியைகளுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது.

இறுதியில் வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *