வந்தவாசி: தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி ஸ்ரீ ஹயக்ரீவர் பூஜை
வந்தவாசி: தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி ஸ்ரீ ஹயக்ரீவர் பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் ஸ்ரீ ஹயக்ரீவர் பூஜை வெகுவிமரிசையாக நடந்தேறியது.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம், குரு ஏஜென்சி மற்றும் எஸ்ஆர்எம் கணினி மையம் சார்பில் 10, 11, 12 ஆம் வகுப்பு, மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி வந்தவாசி ரங்கநாதப் பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பூஜைகள் நடைபெற்றன.
இந்த சிறப்பு பூஜையில் வந்தவாசி பகுதி பள்ளிகளில் பயிலும் 500 க்கும் மேற்பட்ட மாணவ…மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த பூஜையின் முடிவில் மாணவர்களுக்கு பூஜிக்கப்பட்ட கயிறு, ஹயக்ரீவர் போட்டோ, பேனா, பிரசாதம் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் மாணவர்கள் தங்களது ஹால்டிக்கெட் வைத்து வழிபட்டனர்.
இந் நிகழ்வை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், குரு ஏஜென்சி நிர்வாகி ஈ.குருசங்கர், எஸ்.ஆர்.எம். கணினி மைய நிர்வாகி எ. தேவா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
மேலும் கோவில் பட்டாச்சார்யாக்கள் ரங்கநாத குருக்கள், சதிஷ்ஐயர், கோவிந்தராஜ ஐயர் ஆகியோர் மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகளை மேற்கொண்டனர்.