வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் உலக மகளிர் தினவிழா: இரா.சரவணன் பங்கேற்பு
வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் உலக மகளிர் தினவிழா: இரா.சரவணன் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் ஆசியன் மெடிக்கல் அகாடமி வளாகத்தில், வந்தை வட்ட கோட்டை தமிழ் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
தமிழ்ச் சங்க தலைவர் பீ.ரகமத்துல்லா
தலைமையில் நடைபெற்ற,இந் நிகழ்வில், சங்க செயலாளர் எம்.பி.வெங்கிடேசன், துணைத் தலைவர் இரா.நளினி
முன்னிலை வகித்தனர்.
வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்க துணைச்செயலாளர் சா.ரஷீனா அனைவரையும் வரவேற்றார்.
பயிற்சியின் சிறப்பு அழைப்பாளராக மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் இரா சரவணன் கலந்துகொண்டு சமூகத்தில் அதிகம் அறியப்படாத பெண் உழைப்பாளிகளை பாராட்டி சான்றுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்
கவிஞர் மு.அப்துல்லா,பாதிரி ஊராட்சி மன்ற தலைவர் வெ.அரிக்கிருஷ்ணன் சங்க பொருளாளர் சீ.கேசவராஜ்
வாழ்த்துரை வழங்கினர்.
சங்க உறுப்பினர் இரா.தேன்மொழி
நன்றி கூறினார்
விழாவில் சிறப்பிக்கப்பட்ட மகளிர் உழைப்பாளர்களின் பட்டியல்:
சம்சுலைலா
தூய்மைப்பணியாளர்.முத்துலட்சுமி
இளநீர் வியாபாரி. விஜயகுமாரிதையற் கலைஞர். குட்டிமா மலர் வியாபாரம்.
தேவி தேநீர்க்கடை.
அவ்வாமா
கோரைநெசவுதொழிலாளி.
மலர் கட்டிட தொழிலாளி. தில்ஷாத்
இட்லி கடை. புவனேசுவரி
சலவைத்தொழில்.முனியம்மாள்
சுமைப்பணி தொழிலாளி. உள்ளிட்டோர்