செய்யாறு: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போட்ட விடியா திமுக அரசைக் கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
செய்யாறு: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போட்ட விடியா திமுக அரசைக் கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக, இன்று செய்யாறு, அண்ணாசிலை அருகில்
தமிழக முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி மீது பொய் வழக்கு போட்ட விடியா திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ தலைமையில், நடைபெற்றது
முன்னாள் அமைச்சர்கள் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ முக்கூர் என் சுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் கண்டன கோஷங்களை எழுப்பினார்
இதைத் தொடர்ந்து அங்கு குழுமியிருந்த 500 க்கும்மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்
இந்நிகழ்வில், அதிமுக நிர்வாகிகள், டிகேபி மணி பாஸ்கர் ரெட்டியார் முன்னாள் எம்எல்ஏ ஏகேஎஸ் அன்பழகன் விமலா மகேந்திரன் எம் மகேந்திரன் அருகாவூர் அரங்கநாதன் சி துரை மு எம்எல்ஏ வே குணசீலன் வெங்கடேசன் ஜனார்த்தனம் ஆரணி வழக்கறிஞர் சங்கர் ஜி வி கஜேந்திரன் பாரிபாபு ஜெயபிரகாஷ் வெம்பாக்கம் திருமூலன் வயலூர் ராமநாதன் மு ஊராட்சி மன்றத் தலைவர் நமண்டி பாலன் தெள்ளார் டிவி பச்சையப்பன் வந்தவாசி எம்கேஏ லோகேஷ்வரன் ராஜசேகர் ஒட்டல் பாஷா அனக்காவூர் ஏ வி சேகர் உக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் துளசிராமன் உள்ளிட்ட, தி.மலை வடக்கு மாவட்ட ,ஒன்றிய, பேரூராட்சி கிளை கழக நிர்வாகிகள், கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு விடியா திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை ஏழுப்பினார்கள்.