வந்தவாசி: இலவச தையல் பயிற்சி பெற்ற மகளிர்க்கு சான்றிதழ் வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் வழங்கினார்
வந்தவாசி: இலவச தையல் பயிற்சி பெற்ற மகளிர்க்கு சான்றிதழ் வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஆசியன் அகாடமி வளாகத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் இலவச தையற்கலை பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு முகம்மது இஸ்மாயில் நினைவு அறக்கட்டளை தலைவர் டி.எம்.பீர்முகமது தலைமை தாங்கினார்.
அறக்கட்டளை இயக்குநர்
பீ.ரகமத்துல்லா அனைவரையும் வரவேற்றார்.
திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பா.அ. சையத் சுலைமான் பங்கேற்று, இலவச தையற் பயிற்சி பெற்ற 180 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி மகளிர் திட்டம் குறித்தும், பயிற்சி பெற்ற மகளிர்,தையற் தொழில் தொடங்கி சொந்தக்காலில் நிற்க வேண்டும் எனவும் பேசினார்.
மேலும் இந் நிகழ்ச்சியில், மாவட்ட மகளிர் திட்ட உதவி அலுவலர் வெங்கடேசன் மற்றும் ஆஷிக், பயிற்சிஆசிரியைகள், பயிற்சி பெற்றோர் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் முகம்மது இஸ்மாயில் நினைவு அறக்கட்டளை இயக்குநர் ஆர்.ஆசியாபர்வீன் நன்றி கூறினார்.