வந்தவாசி: நீரின்றி அமையாது உலகு உலக நீர் தின கருத்தரங்கம்!
வந்தவாசி: நீரின்றி அமையாது உலகு உலக நீர் தின கருத்தரங்கம்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக நீர் தின விழா கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்ச்சிக்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார்.
எய்ட் இந்தியா திட்ட மேற்பார்வையாளர் க. முருகன், முதுகலை ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, தேசிய பசுமை படை இயக்க ஒருங்கிணைப்பாளர் ம. ரகுபாரதி பங்கேற்று, நீரின்றி அமையாது உலகு என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மேலும் இந் நிகழ்வில், முதுகலை ஆசிரியர்கள் ல. செல்வராஜ், குமரவேல் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் சமூக ஆர்வலர் புருஷோத்தமன் நன்றி கூறினார்.