செய்யாறு: மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!
செய்யாறு: மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம், 25.3.23 சனிக்கிழமை காலை 9.30 லிருந்து மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது
அது சமயம் மேற்படி முகாமிற்கு, திருவண்ணாமலை மாவட்ட அளவிலான அனைத்து ஒன்றியங்களிலிருந்தும் படித்த வேலைவாய்ப்பற்ற, 18 வயது முதல் 35 வரையிலான ஆண்/பெண் இருபாலரும் கலந்து கொண்டு பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
இப் பயிற்சி முகாமிற்கு வருகை தரும் ஆண்/பெண் இருபாலரும் கல்விச் சான்று, குடும்ப அட்டை,ஆதார் கார்ட், ஜாதி சான்றிதழ்களின் நகல்களை எடுத்து வர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
இவ்வாறு வட்டார இயக்க மேலாளர் ரேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது