அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்: வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பால் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்!
அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்: வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பால் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்!
விழா கோலம் பூண்ட செய்யாறு நகரம்!
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து,கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி கே பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன் வழிகாட்டுதலின்படி, மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் தலைமையில்,
வடக்கு ஒன்றிய கழக செயலாளர்
எம்.மகேந்திரன் ஏற்பாட்டில் ஐநூறுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
தொடர்ந்து செய்யாறு வடக்கு ஒன்றிய கழக அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவி அம்மா எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் அங்கு குழுமியிருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்
உடன் ஒன்றிய கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்