திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: பாவலர் ப.குப்பன் பேச்சு!
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: பாவலர் ப.குப்பன் பேச்சு!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் டிஆர். நம்பெருமாள் தலைமை தாங்கினார்.
ஓய்வுபெற்ற வட்டார கல்வி அலுவலர் பொன். சந்திரசேகரன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் பி. சரவணன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய நிறுவனர் பாவலர் ப. குப்பன் பங்கேற்று, குறள் காட்டும் வழி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் திருக்குறளை தேசிய நூலாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆசிரியர் பயிற்றுநர் சுப. தமிழ்நேசன், வழக்கறிஞர் சா.இரா. மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியில் ஆசிரியர் அ.பச்சையப்பன் நன்றி கூறினார்.