இந்தியா முழுவதும் அதிகரிக்கும் கொரோனா; தமிழகத்தில் போதுமான மருந்துகள் உள்ளன – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்தியா முழுவதும் அதிகரிக்கும் கொரோனா; தமிழகத்தில் போதுமான மருந்துகள் உள்ளன – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் தன்மை என்பது உயர்ந்து கொண்டிருக்கிறது என்ற நிலையில், தமிழகத்தில் போதுமான அளவுக்கு படுக்கை, ஆக்சிஜன், மருந்து மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது என்று முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து திமுக சார்பில், குளிரூட்டப்பட்ட அங்கன்வாடி திறப்பு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பின்னர் சாலையில் சென்றவர்களுக்கு இளநீர் வழங்கினார்.
புதுப்பிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட அங்கன்வாடியை சிறுவர்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் அங்கன்வாடி சிறுவர்களை வைத்து குத்துவிளக்கேற்றிய பின்னர் சிறுவர்களுக்கு விளையாடுவதற்கான பொம்மைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.