ஆரணியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் – சட்டமன்ற பேரவை கூட்டத்தில் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ
ஆரணியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் – சட்டமன்ற பேரவை கூட்டத்தில் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ
இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற உறுப்பினரும்,முன்னாள் அமைச்சருமான சேவூர் எஸ் ராமச்சந்திரன் பேசுகையில்:-
“திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சிகள், 10 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள், 18 ஒன்றியங்கள், 12 வட்டங்கள் ஆகியவை நிர்வாக ரீதியாக செயல்பட்டு வருகின்றன. மேலும் 8500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், சுமார் 20 இலட்சம் பேர் வசிக்ககூடிய திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து., வெம்பாக்கம், வந்தவாசி, செய்யாறு, ஆரணி, போளூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய, ஆரணி தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்” என புள்ளி விவரங்களோடு எடுத்து கூறினார் இதற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
“எட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கான கோரிக்கைள் பெறப்பட்டிருப்பதாகவும், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்,
“திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சிகள், 10 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள், 18 ஒன்றியங்கள், 12 வட்டங்கள் ஆகியவை நிர்வாக ரீதியாக செயல்பட்டு வருகின்றன. பெரிய பரப்பளவு கொண்ட மாவட்டமாக உள்ள திருவண்ணாமலையை பிரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. எனவே செம்பாக்கம், வந்தவாசி, செய்யாறு, ஆரணி, போளூர் ஆகிய பகுதிகளை பிரித்து ஆரணியை தலைமை இடமாகக் கொண்டு ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்,
“ஒரு மாவட்டத்தை உருவாக்குவதற்கான சட்ட ரீதியான தகுதிகளை பூர்த்தி செய்யாததால் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்க முடியாது எனவும், 8 மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகியவை உருவாக்கப்பட வேண்டியிருந்தால், நிதி நிலைமைக்கு ஏற்ப முதல் முயற்சியுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்” எனவும் தெரிவித்தார்.
மீண்டும் பேசிய சேவூர் ராமச்சந்திரன்,
“8500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாவட்டத்தின் ஒரு எல்லையில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்வதற்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டி உள்ளது.
இதனால் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் மாவட்ட அலுவலகங்களுக்கு செல்வதற்கு 2-3 மணி நேரம் பயணிக்க வேண்டி உள்ளது. எனவே புதிய மாவட்டமாக பிரிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
அதற்கு மீண்டும் பதில் அளித்த வருவாய்துறை அமைச்சர்,
“மாவட்டத்தில் ஒரு எல்லை முதல் மற்ற எல்லை வரை செல்வதற்கு நீண்ட தொலைவு ஆகிறது. முதலமைச்சர் உடைய கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தற்போதைய நிதி சூழலுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சட்டப்படி மாவட்டத்தை பிரிப்பதற்கான தகுதியை பூர்த்தி செய்யவில்லை” என்றும் தெரிவித்தார்.