உலக சுகாதார தினம்: ரெட் கிராஸ் சார்பில் நோயாளி குழந்தைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள்!
உலக சுகாதார தினம்: ரெட் கிராஸ் சார்பில் நோயாளி குழந்தைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள்!
திருவண்ணாமலை மாவட்டம், இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் வந்தவாசி கிளை சார்பில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு அரசு பொது மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல வார்டில் உள்ள நோயாளி குழந்தைகளுக்கு பிஸ்கட், பழங்கள், ஹார்லிக்ஸ், அத்தியாவசிய உபகரண பெட்டகங்கள் வழங்கப்பட்டது.
வந்தவாசி ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன் தலைமை உரையாற்றினார்
பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர் சீ. கேசவ ராஜ் முன்னிலை வகித்தார்.
முதன்மை செவிலியர் முபாரக் பேகம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவப்பிரியா பங்கேற்று, உடல் சுகாதாரம், சுற்றுப்புற சுகாதார செயல்பாடுகளை பற்றி விளக்கினார்.
மேலும் கொரோனா தாக்கம் அதிகமாகும் சூழலில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தப்பட்டது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர்கள் கு. சதானந்தன், மலர் சாதிக், வி.எல். ராஜன், ஜி. விநாயக மூர்த்தி உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இறுதியில் செவிலியர் சுகந்தி மேரி நன்றி கூறினார்.