வந்தவாசி: சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டது
வந்தவாசி: சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
நகர கழக செயலாளர் தயாளன் தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.சீதாபதி முன்னிலையில், நடைபெற்ற இந் நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் ஆகியோர வடக்கு மாவட்ட திமுக அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை, சவுரியார் பாளையம், ஆகிய இடங்களில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்
உடன் நகர மன்றத் தலைவர் எச்.ஜலால் துணைத் தலைவர் அன்னை க.சீனு முன்னாள் நகர செயலாளர் எஸ்.அன்சாரி நகர மன்ற உறுப்பினர் நாகூர் மீரான் உள்ளிட்ட மாவட்ட,ஒன்றிய, நகர பேரூர் கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.