வந்தவாசி: குப்பைகளை அகற்ற ஊராட்சிகளுக்கு மின்கலன் வாகனங்கள்!
வந்தவாசி: குப்பைகளை அகற்ற ஊராட்சிகளுக்கு மின்கலன் வாகனங்கள்!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட 26 ஊராட்சிகளில் குப்பைகளை அகற்ற ரூ.82 லட்சம் மதிப்பில் 33 மின்கலன் வாகனங்கள் வழங்கப்பட்டன.
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மருதாடு, வழூா் அகரம், வெளியம்பாக்கம், அத்திப்பாக்கம் உள்ளிட்ட 26 ஊராட்சிகளுக்கு மொத்தம் 33 மின்கலன் வாகனங்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்ச்சிக்கு வந்தவாசி ஒன்றியக்குழுத் தலைவா் எ.ஜெயமணி ஆறுமுகம் தலைமை வகித்தாா்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா் ந.ராஜன்பாபு
ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமாா் மின்கலன் வாகனங்களை ஊராட்சி நிா்வாகிகள் மற்றும் தூய்மைப் பணியாளா்களிடம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.