வந்தவாசி: நகர திமுக, மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில்,இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
வந்தவாசி: நகர திமுக, மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில்,இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் நகர திமுக, மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை நடைபெற்றது
முக்தவல்லி அப்துல் காதர் ஷரீப் தலைமையில் நடைபெற்ற மத நல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக திகழும் இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ் தரணிவேந்தன் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் கலந்து கொண்டு நோன்பு திறக்கும் நேரம் அறிவிக்கப்பட்டதும் இஸ்லாமியர்களோடு நோன்பு திறந்தனர்
இந் நிகழ்வில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் டி.எம்.பீர் முகம்மது தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.சீதாபதி முன்னாள் எம்எல்ஏ எதிரொலி மணியன் நகர மன்றத் தலைவர் எச்.ஜலால் துணைத் தலைவர் அன்னை க.சீனு நகர கழக செயலாளர் தயாளன் நகர மன்ற உறுப்பினர் நாகூர் மீரான் மாவட்ட சிறுபான்மைபிரிவு அமைப்பாளர் அ.ப.ரசூல் அப்துல் வஹாப் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அவைத்தலைவர் நவாப் ஜான் நன்றி கூறினார்