60 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
60 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 111 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.
அதன் படி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 111 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4,42,35,772 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,141 ஆக உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 24 பேர் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 57,542 லிருந்து 60,313 ஆக உயர்ந்து உள்ளது.
இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதித்து சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்து உள்ளது.
கேரளா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் அதிகமாக தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.
அதிகபட்சமாக கேரளாவில் 19 ஆயிரத்து 848 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதிகபட்சமாக ஏப்ரல் 14 ஆம் தேதி 11,109 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு அதிகமாக பதிவானது.
தமிழ்நாட்டில் நேற்று 5,988 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதில் 514 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதுவரை தமிழ்நாட்டில் 36, 02, 215 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 366 பேர் கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
தமிழ் நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 138 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.