சென்னை: தென்னிந்திய தர்காக்கள், பள்ளிவாசல்கள் அசோசியேசன் சார்பாக மத நல்லிணக்க இப்தார் நிகழ்வு
சென்னை: தென்னிந்திய தர்காக்கள் பள்ளிவாசல்கள் அசோசியேசன் சார்பாக மத நல்லிணக்க இப்தார்நிகழ்வு
சென்னை மவுண்ட் ரோடு புதுப்பிக்கபட்ட புஹாரி ஹோட்டலில் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேசன் சார்பாக மத நல்லிணக்க புனித ரமலான் இப்தார் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
இந் நிகழ்வில் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேசன் தலைவரும் தமிழக அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினர் நாகூர் கலீபா சாஹிப் தலைமையேற்று அனைவரையும் வரவேற்றார்.
தமிழக வக்ப் வாரிய இமாம் நூருல் அமீன் ரமலான் சொற்பொழிவாற்றினார்.
இஸ்லாமியர்களுக்கு அரணாக தமிழக அரசு விளங்குவதை பட்டியலிட்டு பேசினார்.
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேசன் தலைவர் நாகூர் கலீபா சாஹிப் பேசுகையில்:
அரசாணை மூலம் எமது அமைப்பிற்க்கு அங்கீகாரம் தந்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் நன்றி தெரிவித்தார்.
இப்தார் நிகழ்வில் திராவிட முன்னேற்ற கழக அமைப்பு செயலர் ஆர்.எஸ். பாரதி, சென்னை கார்ப்பேரேசன் ஜோனல் கமிட்டி சேர்மன் மதன் மோகன் , தமிழக அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினர் திருப்பூர்அல்தாப், தமிழக அரசு வக்ப் வாரிய உறுப்பினர் செய்யது ரேஹான், நடிகர் ஜீவா , சென்னை மூசா சா காதிரி தர்கா டிரஸ்டி அபு மூசா காதிரி, சென்னை புஹாரி ஹோட்டல் உரிமையாளர் நவாஸ், சமாஜ்வாதி கட்சி தமிழக பொது செயலாளர் கவிஞர் வாசு, சிட்மா அசோசியேசன் வழக்கறிஞர்கள் ஆனந்தராஜ், அப்துல் ரஹ்மான், துரீப்தீன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேசன் செயலாளர் முஜம்மில் ஜாபர் மிகச் சிறப்பாக செய்திருந்தார்.