வந்தவாசி: உலக புத்தக தினவிழாவை முன்னிட்டு 100 புத்தகங்கள் நூலகத்திற்கு வழங்கப்பட்டது
வந்தவாசி: உலக புத்தக தினவிழாவை முன்னிட்டு 100 புத்தகங்கள் நூலகத்திற்கு வழங்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் இணைந்து உலக புத்தக தின விழாவை நூலக மைய வளாகத்தில் நடத்தினர்.
இந் நிகழ்விற்கு கிளை நூலகர் க. மோகன் தலைமை தாங்கினார்.
தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர்கள் எஸ். அப்பாண்டைராஜன், இலவச சட்டப் பணிக்குழு ஆலோசகர் வி.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி வட்ட ஓய்வூதியர் சங்க தலைவரும், தமிழறிருமான பொன். ஜினக் குமார் பங்கேற்று, புத்தக வாசிப்பின் அவசியமும், புத்தகங்களை வாசிப்போம் மனிதர்களை நேசிப்போம் என்றும் வலியுறுத்தி பேசினார்.
மேலும் உலக புத்தக தினத்தை முன்னிட்டு நூலகத்திற்கு பல்திறன் சார்ந்த 100 புத்தகங்கள் நூலகரிடம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் தீயணைப்பு துறை அலுவலர் ந. குப்புராஜ், பட்டதாரி ஆசிரியர் ம. ரகு பாரதி, ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் கு. சதானந்தன், சுவாமி விவேகானந்தா தொண்டு மைய நிறுவனர் ம. சுரேஷ் பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
புத்தக வாசிப்பு பற்றிய நடனம், கவிதை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் நூலகர் எஸ். ஜோதி நன்றி கூறினார்.