திருவாரூா் மாவட்டத்தில் ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகை
திருவாரூர் மாவட்டத்தில் ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகை
திருவாரூா், கொடிக்கால்பாளையம், புலிவலம், அடியக்கமங்கலம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் புனித ரமலான் தின சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
சம்பந்தப்பட்ட பள்ளி வாசல்களின் தலைமை இமாம், அவர்களின் பயான் சொற்பொழிவை தொடர்ந்து சிறப்பு தொழுகை நடைபெற்றது
தொழுகையின் இறுதியில் இஸ்லாமியா்கள், ஒருவருக்கொருவா் தழுவி ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.
இதேபோல, அடியக்கமங்கலத்தில் தமுமுக மற்றும் முஹம்மதியா கல்வி அறக்கட்டளை சாா்பில் நோன்பு பெருநாள் தொழுகை ஈத்ஹா மைதானத்தில் நடைபெற்றது.
கூத்தாநல்லூா் அனைத்து ஜமாஅத், 18 பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது
பெரியப்பள்ளி வாசலில் இமாம் முகம்மது அலி, மேலப்பள்ளி வாசலில் இமாம் அப்துல் ரஹீம், சின்னப்பள்ளி வாசலில் இமாம் முகம்மது அலி தலைமையில், சிறப்பு தொழுகை நடைபெற்றது
பயான் சொற்பொழிவை தொடா்ந்து,
நடைபெற்ற சிறப்புத் தொழுகையின் இறுதியில் இஸ்லாமியா்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது மகிழ்ச்சி யை வெளிப்படுத்தினர்
ஜாதி மத வேறுபாடின்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதேபோல, பொதக்குடி ஊா் உறவின்முறை ஜமாஅத் நிா்வாக சபை அறப்பணிச் சங்கம் ஏற்பாட்டில், எம்.ஏ.நூருல்லாஹ் நினைவு விளையாட்டு மைதானத்தில் இமாம் பி.ஹெச். சலாகுதீன் தலைமையில், சிறப்பு தொழுகை நடைபெற்றது