உலக மலேரியா தின விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு!
உலக மலேரியா தின விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகராட்சி இணைந்து உலக மலேரியா தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
இந் நிகழ்ச்சிக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் காளிச்செல்வம் தலைமை தாங்கினார்.
செவிலியர் ஸ்டெல்லா வரவேற்றார்.
நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், விமல் ராஜ், ஹெல்த் இன்ஸ்பெக்டர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக,
வந்தவாசி ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன், எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் பங்கேற்று, மலேரியா எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பற்றியும், அதற்கான விழிப்புணர்வு கருத்துரைகளை வழங்கினார்.
நகராட்சி மூலம் வந்தவாசி பகுதியில் கொசு மருந்து அடிக்க வலியுறுத்தப்பட்டது.
மேலும் வழக்கறிஞர் சா இரா. மணி, வெற்றி அறிவொளி வெங்கடேசன், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ. ஷாகுல் அமீது உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரைகளையும், புத்தக பரிசுகளையும் வழங்கினர்.
பிறகு அனைவராலும் உலக மலேரியா ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இறுதியில் ஆரம்ப சுகாதார மருந்தாளுநர் குணசீலன் நன்றி கூறினார்.