ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் மாணவர்களுக்கான கோடைகால இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள்!
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் மாணவர்களுக்கான கோடைகால இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள்!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் மாணவர்களுக்கான கோடைகால இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் ( ஓவியப் பயிற்சி, ஆங்கில உரையாடல் பயிற்சி, யோகாசனம், ஹிந்தி பயிற்சி, திருக்குறள் பயிற்சி, கணினி பயிற்சி, கையெழுத்து பயிற்சி, தன்னம்பிக்கை பயிற்சி உள்ளிட்டவை) தொடங்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார்.
பிரம்ம குமாரி முத்துலட்சுமி, அரிமா வரதராஜன், பூங்குயில் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓவிய ஆசிரியர் பெ. பார்த்திபன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ். குமார் அவர்கள் பங்கேற்று, மாணவர்கள் தங்களது அடிப்படைத் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், கோடை விடுமுறையில் பயனுள்ள வகையில் இத்தகைய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பேசினார்.
உடன் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர்கள் கு. சதானந்தன், அ. ஷாகுல் அமீது, கலாம் பவுண்டேசன் நிர்வாகி சீ. கேசவராஜ், யுரேகா திட்ட மேற்பார்வையாளர் க. முருகன், ஆசிரியைகள் சாந்தி, கற்பகம் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரைகள் வழங்கினர்.
மேலும் மாணவர்களுக்கான இலவச கற்பித்தல் பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
20 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இப்பயிற்சி வகுப்பின் இறுதியில் மாணவர்களுக்கு ‘வளர் இளம் மேதை’ விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இறுதியில் ஆசிரியர் புருஷோத்தமன் நன்றி கூறினார்.